தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில், 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதேபோல், நாமக்கல்லில் குறைந்தபட்ச வெப்பநிலை, 17.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.