மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் என்றும் மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை உள்ளடக்கிய எரிசக்தி துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சாலை, ரயில்வே மற்றும் உயர் கல்வித் துறை, ஐஐஎம் சம்பல்பூர் மாடலையும், நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் மோடி பார்வையிட்டார்.
கூட்டத்திடில பேசிய பிரதமர், ஒடிசாவின் ஏழை பிரிவைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற அனைத்துப் பிரிவினரும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள் என தெரிவித்தார். து ஒடிசா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
ஒடிசாவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மையமாக மாற்ற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் IISER பெர்ஹாம்பூர் மற்றும் புவனேஷ்வரின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி போன்ற நவீன கல்வி நிறுவனங்களை நிறுவியதன் மூலம் ஒடிசாவின் இளைஞர்களின் தலைவிதி மாறிவிட்டது.
தற்போது, ஐஐஎம் சம்பல்பூர் ஒரு நவீன மேலாண்மை நிறுவனமாக நிறுவப்பட்டதன் மூலம், மாநிலத்தின் பங்கு மேலும் வலுப்பெற்று வருகிறது என மோடி குறிப்பிட்டார்
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை அறிவிப்பதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக ஸ்ரீ அத்வானியின் இணையற்ற பங்களிப்பையும், புகழ்பெற்ற மற்றும் விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினராக பல தசாப்த கால அனுபவத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பது, தேசம் தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை மறப்பதில்லை என்பதன் அடையாளம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அத்வானி காட்டிய அன்பு, ஆசி மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அனைத்து குடிமக்கள் சார்பாகவும் அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறினார்.