மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் மறப்பதில்லை : பிரதமர் மோடி
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் மறப்பதில்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை  தேசம் என்றும்  மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை உள்ளடக்கிய எரிசக்தி துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சாலை, ரயில்வே மற்றும் உயர் கல்வித் துறை, ஐஐஎம் சம்பல்பூர் மாடலையும், நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் மோடி பார்வையிட்டார்.

கூட்டத்திடில பேசிய பிரதமர், ஒடிசாவின் ஏழை பிரிவைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற அனைத்துப் பிரிவினரும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலனைப் பெறுவார்கள் என தெரிவித்தார். து ஒடிசா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

ஒடிசாவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மையமாக மாற்ற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் IISER பெர்ஹாம்பூர் மற்றும் புவனேஷ்வரின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி போன்ற நவீன கல்வி நிறுவனங்களை நிறுவியதன் மூலம் ஒடிசாவின் இளைஞர்களின் தலைவிதி மாறிவிட்டது.

தற்போது, ஐஐஎம் சம்பல்பூர் ஒரு நவீன மேலாண்மை நிறுவனமாக நிறுவப்பட்டதன் மூலம், மாநிலத்தின் பங்கு மேலும் வலுப்பெற்று வருகிறது என மோடி குறிப்பிட்டார்

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை அறிவிப்பதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக ஸ்ரீ அத்வானியின் இணையற்ற பங்களிப்பையும், புகழ்பெற்ற மற்றும் விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினராக பல தசாப்த கால அனுபவத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பது, தேசம் தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை மறப்பதில்லை என்பதன் அடையாளம் என்றும் பிரதமர் மோடி  தெரிவித்தார். அத்வானி  காட்டிய அன்பு, ஆசி மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அனைத்து குடிமக்கள் சார்பாகவும் அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

Tags: SambalpurIndiaModiodishaAdvanimodi thank advani
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!

Next Post

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி : மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies