திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தவர் கே.எஸ்.அழகிரி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.எஸ். வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சட்டமன்ற குழு தலைவராக செல்வப் பெருந்தகை இருந்து வந்த நிலையில், புதிய சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவை தேர்தல் தொகுப்பங்கீடு பேச்சுவார்ததை நடைபெற்றும் வரும் நிலையில் திமுகவுக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படும் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.