வேளாண் துறையை மேம்படுத்தும் மத்திய அரசு!
Sep 13, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேளாண் துறையை மேம்படுத்தும் மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 09:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கும் மத்தியஅரசு, இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை விவசாயிகளை ஆதரிப்பதற்கும், இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்குமான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பின் தூணாக (FCI) குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், உத்திப்பூர்வ உணவு தானிய சேமிப்புகளை பராமரித்தல், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகித்தல் மற்றும் சந்தையில் உணவு தானிய விலைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் உத்தரவுகளை திறம்பட நிறைவேற்றுவதில் அதன் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தின் அதிகரிப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

நிதித் தேவையின் இடைவெளியை ஈடுகட்ட இந்திய உணவுக் கழகம் ரொக்கக் கடன், குறுகிய காலக் கடன் வழிவகைகள் போன்றவற்றை நாடுகிறது.

அனுமதிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரித்தல் மற்றும் மேலும் உட்செலுத்துதல் மூலம் வட்டிச் சுமை குறைந்து, பொருளாதாரச் செலவு குறையும். இந்த மூலதனத்தை உட்செலுத்துவதன் மூலம், இந்திய உணவுக் கழகம் தனது சேமிப்பு வசதிகளை நவீனப்படுத்துதல், போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் ஆகியவற்றையும் மேற்கொள்ளும்.

இந்த நடவடிக்கைகள் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு உணவு தானியங்களை திறம்பட விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் அவசியம்.

நடைமுறை மூலதனத் தேவைக்காகவும், மூலதன சொத்துக்களை உருவாக்குவதற்காகவும் இந்திய உணவுக் கழகத்திற்கு சமபங்கு உரிமைகளை மத்திய அரசு வழங்குகிறது. தற்போதுள்ள உள் அமைப்புகள் மற்றும் வெளிப்புற அமைப்புகள் (மாநில கொள்முதல் இணையதளங்கள்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க இந்திய உணவுக் கழகம் ஒரு விரிவான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மின்னணு அலுவலக அமலாக்கம் ஏற்கெனவே இந்திய உணவுக் கழகத்தை குறைந்த காகித செலவு கொண்ட அமைப்பாக மாற்றியுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் முக்கிய செயல்பாட்டு மென்பொருளாக விளங்கும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளின் இந்த முன்முயற்சிகள், பொதுவான டிஜிட்டல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதுடன், தகவல்களுக்கான ஒற்றை ஆதாரத்தை வழங்கும்.

இந்திய உணவுக் கழகம் தனது திறனை மேம்படுத்தும் வகையில், சிமெண்ட் சாலைகள், கூரை பராமரிப்பு, மின் விளக்குகள் மற்றும் எடைமேடைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை விடாமுயற்சியுடன் செயல்படுத்தி உணவு பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது.

Tags: central governmentagriculture
Share
Tweet
SendShare
Previous Post

இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2024! – இஸ்ரோ அறிவிப்பு

Next Post

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி : திடீரென மாற்றப்பட்ட கே.எஸ்.அழகிரி!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies