இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் காசி வரலாறு குறித்த இரு புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் காசியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. காசி பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய இரண்டு புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளில் காசியின் வளர்ச்சி, அதன் கலாச்சாரம் ஆகியவையும் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார். காசி இளம் தலைமுறையினரால் அதிகாரம் பெற்றுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
காலத்தை விட தொன்மையானது என்று அழைக்கப்படும் காசி, அதன் அடையாளத்தை இளம் தலைமுறையினர் பொறுப்புடன் மேம்படுத்தி வருகின்றனர். இந்தக் காட்சி என் மனதைத் திருப்திப்படுத்துகிறது. என்னைப் பெருமைப்படுத்துகிறது. இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார்.