இந்திய வீரர் ஆகாஷ் தீப் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஒரே ஓவரில் 2 விக்கெட்களும் இதுவரை 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சியில் நடைபெறுகிறது .
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பட்டிகை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தற்போது 5 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா பங்கேற்கவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்தப் போட்டியில் ஆகாஷ்தீப் என்ற அறிமுக வேகப் பந்துவீச்சாளர் களமிறங்கியுள்ளார்.
போட்டியின் நான்காவது ஓவரிலேயே ஆகாஷ்தீப் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் சாக் கிரவுலி இன்சைட் எட்ஜ் செய்தார். ஆஃப் ஸ்டம்ப்பு பறந்தது. தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதாக ஆகாஷ்தீப் துள்ளிக் குதித்தார்.
மற்ற இந்திய வீரர்களும் விக்கெட்டை கொண்டாடினர். ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை. ஒரு நிமிடம் இருக்குமாறு கூறி விட்டு, அந்த பந்து நோ பால் என்பதை உறுதி செய்தார்.
இதை அடுத்து ஆகாஷ்தீப் நோ பால் வீசியது தெரிய வந்தது. தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தியதாக நினைத்து மகிழ்ந்து பின் ஏமாற்றம் அடைந்தார் ஆகாஷ்தீப்.
அதன் பிறகு ஆகாஷ்தீப் ஒரே ஓவரில் இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 10-வது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்து டாட் பந்தாக அமைய பின்னர் அடுத்த பந்திலேயே ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் தனது மூன்றாவது விக்கெட்டாக சாக் கிரவுலி விக்கெட்டை வீழ்த்தினார்.