உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது மக்கள் குடிபோதையில் சாலைகளில் கிடப்பதைப் பார்த்தாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச இளைஞர்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ‘நாஷேடி’ என்ற வார்த்தையை இளவரசர் பயன்படுத்தியதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச இளைஞர்களை, ‘நாஷேதி’ என ‘காங்கிரஸ் இளவரசர் அழைத்துள்ளார். இது என்ன பாஷை?, இரண்டு தசாப்தங்களாக என்னை திட்டியவர்கள் தற்போது, விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேச இளைஞர்கள் வளர்ந்த மாநிலத்தை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது உத்தரப்பிரதேசம் முன்னேறி வருவதால், காங்கிரஸ் குடும்பத்தின் இளவரசர் (ராகுல்காந்தி) உத்தரப்பிரதேச இளைஞர்கள் அடிமைகள் என்று கூறுகிறார். இதனை உத்தரப்பிரதேச இளைஞர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.