‘பா.ஜ.க, தலைமை முடிவெடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அதில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை’ எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளம் வாக்காளர்கள் சிந்தனையாளர்கள் தொழில் முனைவோர் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கோவை அல்லது கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அண்ணாமலை, இந்த தகவல் எங்கிருந்து, யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை எந்த பணியை கொடுக்கிறார்களோ, அதை செய்கிறேன்.
ஒருவேளை கட்சி தலைமை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னாலும் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. நான் கட்சியிடம் எதையும் கேட்கவில்லை. அனைத்தையும் கட்சி தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ., தலைமை யாரை நிறுத்தப்போகிறார்கள் எனத் தெரியாது. பாஜக கட்சி வளர்ந்துள்ளது.
தமிழகத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் வருகை தரவுள்ளார். வருகின்ற மார்ச் 4- ஆம் தேதி சென்னையில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வருகின்ற 4-ஆம் தேதி கல்பாக்கம் வரும் பிரதமர் மோடி, அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார்.
மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு உதயநிதி சமம் கிடையாது. அவருடைய அப்பா, தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்து எம்எல்ஏ, அமைச்சரானார் எனத் தெரிவித்தார்.