பிஜு பட்நாயக் தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புகழ்பெற்ற பிஜு பட்நாயக் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் முன்னுதாரணமானது.
இன்று, இந்தச் சிறப்புமிக்க நாளில், சண்டிகோலேயில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, ஒடிசா மக்கள் மத்தியில் நான் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
I pay homage to the legendary Biju Patnaik Ji on his birth anniversary. His visionary leadership and indomitable spirit continue to inspire generations. His contributions to our nation and his unwavering commitment to development are exemplary.
Today, on this special day, I look…
— Narendra Modi (@narendramodi) March 5, 2024