வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்து வருவதாக தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் குடியுரிமை இழக்க நேரிடும் என அவர்கள் பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்க CAA வில் எந்த விதியும் இல்லை என உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவோம் என உறுதியளித்தோம். ஆனால் சுதந்திரம் பெற்றதில் இருந்தே காங்கிரஸ் அதனை எதிர்த்தது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து “தங்கள் மதத்தையும் மரியாதையையும் காப்பாற்ற கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவிற்கு தப்பி வந்தனர்.
ஆனால் குடியுரிமை பெறவில்லை என்று குடியுரிமை இல்லாமல், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அவமானங்களை அனுபவிப்பார்கள். இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.