தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் புண்ணிய பூமியில் உள்ள சேலம் கோட்டை மாரியம்மனை வணங்கி என உரையை தொடங்குகிறேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜகவுக்கும், எனக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.இதனை நாடே பேசுகிறது. பாஜகவுக்கு கிடைகும் பெரும் ஆதரவு திமுகவின் தூக்கத்தை தொலைத்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர்.
எனவே தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். உள்கட்டமைப்பு, வளர்ச்சிபணிகள், விவசாயிகள், மீனவர்கள் நலன் என பாரதம் தன்னிறைவு பெற் 400க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள பாமகவை வரவேற்கிறேன். மருத்துவர் ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பாஜக கூட்டணிக்கு உதவும்.
சேலம் வரும்போது பழைய ஞாபகம் வருகிறது. 40 ஆண்டுகளுக்கு நான் ஆன்மீக யாத்திரை சென்ற போது ரத்னவேல் என்பவர் என கூட வந்தார். அவர் சேலம் தொடர்பான பல்வேறு தகவல்களை எனக்கு விவரித்தார். எனக்கு தமிழ் கற்று தர முயன்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் தற்போது உயிருடன் இல்லை.
தமிழகதில் பாஜகவை காலூன்ற வைத்த கே.என்.லெட்சுமனனையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும் கட்சிக்காக உழைத்த சேலம் ஆடிட்டிர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை உருக்கமுடன் பிரதமர் விவரித்தார். அவருக்காக மௌன அஞ்சலி செலுத்துமாறும் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இண்டி கூட்டணியின் அசல் ரூபம் என்ன என்பது மும்பையில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்து மதத்தினர் சக்தியை வடிவமாக வழிபடுகிறோம். ஆனால் அந்த சக்தியை அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். சக்தியை அழிக்க நினைப்பவர்களை அந்த சக்தியே அழித்துவிடும்.
திமுக, காங்கிரஸ் இண்டி கூட்டணியினர் இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் மற்ற மதத்தினரை அவர்கள் அவமதிப்பதில்லை. இதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக வீண் செய்கிறது.காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு 5 ஜி தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.
திமுகவும், காங்கிரசும் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்துகின்றனர். திமுக அரசு கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. மதிய உணவு திட்டம் வழங்கிய காமராஜர் எனக்கு உத்வேகம் அளித்த தலைவர்.
மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நினைத்து பார்ககிறேன். அவர் மனது வைத்திருந்தால் பிரதமராகி இருப்பார். ஆனால், காங்கிரஸ் குடும்ப ஆட்சி அவரை வளரவிடவில்லை.
நவீன உட்கட்டமைப்பு மூலம் மிகப்பெரிய உயரத்தை எட்டி வருகிறோம். சுயசார்பு பாரதத்தை அடைய நாம் உறுதி பூண்டுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கி வருகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உலகின் மிகப்பழமையான மொழி தமிழ் என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன். ஆனால் என்னால் தமிழ் பேச முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. சேலத்தில் 5 அல்லது 6 ஆண்டுகள் உங்களுடன் இருந்தால் தமிழ் கற்றுக்கொள்வேன் என நினைக்கிறேன்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம். அடுத்த 5 ஆண்டுகள் மிக முக்கியமானவை. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என பிரதமர் மோடி கூறினார்.