கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், அலுவலகப் பொறுப்பாளருமான சீனிவாசன், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ மார்ச் 17ஆம் தேதி 59 மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஷபீக் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஷபீக், சதித்திட்டத்தை செயல்படுத்த மற்ற தலைவர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களுடன் சதி செய்த அஷ்ரஃப் கே.பிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.