தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டடங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, எஸ். ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 40 பேர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டாக்டர் பி.சுதாகர் ரெட்டி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன்,.ஜி.கே. வாசன். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், தமிழருவி மணியன், தேஜஸ்வி சூர்யா, வானதி சீனிவாசன், எச்.ராஜா,குஷ்பூ சுந்தர், சரத்குமார், வி.பி.துரைசாமி, கே.எஸ்.நரேந்திரா, நாராயணன் திருப்பதி,கரு நாகராஜன்,கனக சபாபதி,ஜி.கே. நாகராஜ், நடிகர் செந்தில் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.