சேலம் மாவட்டம், தாளவாடி அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக, அப்பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் – ஆஷா தம்பதி. இத்தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஆஷா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இத்தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் வெகுநேரமாகியும் ஆஷா வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஆஷா உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.