3-வது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடி : பொதுத்துறை நிறுவன பங்குகள் விலை உயரும் என கணிப்பு!
Jul 29, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடி : பொதுத்துறை நிறுவன பங்குகள் விலை உயரும் என கணிப்பு!

Web Desk by Web Desk
Jun 2, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் காணக்கூடும் என்றும் CLSA அமைப்பு கணித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேர்தல் முடிவுகளுக்கும் நிறுவனப் பங்குகளின் விலை உயர்வுக்கும் எப்போதுமே ஒரு சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது.

ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாட்டில் காலத்துக்கேற்ற பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் இடம்பெற்றிருந்தால், அந்த கட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது, பங்கு விலைகள் தானாக உயரும்.

மூன்றாவது முறை பிரதமராகும் போது , இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக்குவேன் என பிரதமர் மோடி உத்திரவாதம் தந்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் பங்குகளின் விலை உயரக் கூடும் என முதலீடுகளுக்கு ஆலோசனைகளை கூறும் CLSA அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதே போல ஆட்சியில் இருக்கும் பதவிக்காலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டங்களை நடைமுறை படுத்தியதாலும், மேலும் தனது அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்ட வரைவை வைத்திருப்பதாலும், இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் வரும் நாளில், பல நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கத்தை நாட்டை தலைமை தாங்கும் தலைவரின் ஆளுமை தீர்மானிக்கிறது. தலைவர் ஒரு சிறந்த ஆளுமை மற்றும் செல்வாக்கு பெற்றவராக இருந்தால், அவர் தலைமைக்காக நாட்டில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும்.

பிரதமர் மோடியின் தலைமையை உலகமே பாராட்டுகின்ற சூழலில், இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில், இந்திய பங்கு சந்தையில் அரசு துறை நிறுவனங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட மிக சிறப்பாக செயல் பட்டன என்று சுட்டிக் காட்டியிருக்கும் இந்த அறிக்கை, 2024 தேர்தல் முடிவுக்குப் பிறகும், இதே போக்கு தான் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, L&T, NTPC, NHPC, PFC, ONGC, IGL,மற்றும் Mahanagar Gas பங்குகளும்,, வங்கிகளில்,HDFC, ICICI, Axis Bank மற்றும் IndusInd போன்ற வங்கிப் பங்குகளும், அசோக் லேலண்ட், அல்ட்ராடெக், பஜாஜ் ஃபைனான்ஸ், மேக்ஸ் ஃபைனான்சியல்ஸ், ஜொமேட்டோ மற்றும் டிமார்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும், மேலும் தொலைத்தொடர்பு தொடர்பான துறைகளில், பார்தி ஏர்டெல், இண்டஸ் டவர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் விலை அதிகமாகும் வாய்ப்பிருக்கிறது என்று CLSA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிலும் சரி, 2019 ஆண்டிலும் சரி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு பங்குகளின் விலை அதிகமானது. அது போலவே இந்த ஆண்டும் நடக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக அம்பானி, அதானி, டாடா, பங்குகள் விலை உயரும் என்பார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் தொழில் துறை சிறப்பாக செயல் படுவதால், இப்போதெல்லாம், இது பிரதமர் மோடி பங்குகள் என்றே சொல்லப்படுகின்றன.

 

Tags: IndiaModibjpprime ministerpsushare market
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் ஆளுநர் தமிழிசை பிறந்த நாள் : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஐசிசி ஆடவர் டி-20 கிரிக்கெட் போட்டி : டூடுல் வெளியிட்ட கூகுள்!

Related News

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

ஜெர்மனி : 1970-ல் கட்டப்பட்ட 22 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கலைஞர் அறிவாலயம்!

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

எலிகளை மாணவர்களுக்கே சமைத்து கொடுக்க வேண்டியது தானே – திமுக கவுன்சிலர் சர்ச்சை பேச்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் ஐரோப்பியக் கால்பந்து இறுதிப்போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி!

திருவள்ளூர் : பூமி பூஜையின் போது அறுகம்புல் கேட்ட அமைச்சர் நாசர்!

சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக் – வீடியோ காலில் பாராட்டிய நிதின் கட்கரி!

குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மம்தா குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு!

நெல்லை அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை சுட்டுப்பிடித்த போலீசார்!

துல்கர் சல்மான் நடிக்கும் “காந்தா” படத்தின் டீசர் வெளியீடு!

நிமிஷா மரண தண்டனையை ஏமன் அரசு ரத்து செய்ததாக தகவல்!

கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பா கைது!

குற்றம் கடிதல் 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies