இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. எனவே, நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் விடுமுறைகால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற முறைகேடு புகார்களால் தேர்வின் புனிததன்மை பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அதேவேளையில், இளநிலை மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெளிவுடுத்தியுள்ளனர்.