மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவதூறாக விமர்சித்த திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு .நாகராஜன் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில், திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவதூறாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், தமிழக காவல்துறையை விமர்சித்தால் பல்வேறு வழக்குகள் போடும் தமிழக அரசு, பிரதமர் முதல் பாஜக தலைவர்கள் வரை அவதூறாக பேசுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
			















