ஹைதராபாத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஹைதராபாத் திரும்பியது.
ஹைதராபாத்திலிருந்து அதிகாலை 3.21 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், சிறிதுநேரத்திலேயே என்ஜின் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்த விமானி, பத்திரமாக விமானத்தை ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
அதில் இருந்த பயணிகளை மாற்று விமானத்தில் கோலாலம்பூர் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருப்பதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.