சொல்வது ஒன்று செய்வது ஒன்று : "ட்ரம்ப் நல்ல போலீசா? - கெட்ட போலீசா?"
Sep 10, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுடனான உறவில் ட்ரம்ப் அண்மைக் காலமாகவே இரட்டை நிலைபாட்டில் இருந்து வருகிறார். இந்தியாவைப் பாதிக்கும் நடவடிக்கைகைளத் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டு வருகிறார். ட்ரம்பின் இரட்டை வேடம் குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்புக்குப் பின்னர், ட்ரம்ப்பின் அனைத்துச் செயல்பாடுகளுமே சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளன. அண்மையில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடியபோது முதல் ஆளாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எப்போதும் போல் சிறப்பாக உள்ளதாகவும், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் வலுவான நட்பைத் தொடர்ந்து வருவதாகவும் கூறினார். தமக்கும் மோடிக்கும் எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லை எனக் கூறிய ட்ரம்ப், தங்களது நட்பின் அடையாளமாகத்தான் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்தார்.

இன்னும் சில வாரங்களுக்கு முன்னால் சென்றால், இந்தியாவைச் சீனாவிடமும், ரஷ்யாவிடமும் இழந்துவிட்டோம் என ட்ரம்ப் பொதுவெளியில் வெளிப்படையாகவே புலம்பியிருந்தார். இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்தியாவுடன் ஏற்பட்ட உறவு விரிசலைச் சீரமைக்க, ட்ரம்ப் தவியாய் தவித்து வருவதாகத் தோன்றும். ஆனால், உண்மை நிலவரம் வேறாக உள்ளது.

இந்தியர்கள்தான் அதிகளவில் அமெரிக்காவுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஐடி சேவைகளை வழங்கி வருகின்றனர். இதற்கு முட்டுகட்டைப் போடுவதுபோல அண்மையில் ட்ரம்ப் அரசு hire act என்ற புதிய மசோதாவைத் தாக்கல் செய்தது. இதனால், இந்தியாவில் இருந்தபடி அமெரிக்காவுக்குப் பணியாற்றும் ஐடி ஊழியர்களின் வேலைப் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள சபஹர்த் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்து இந்தியா நிர்வகித்து வருகிறது. இதன் மூலம், ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா எளிதாக வர்த்தகம் மேற்கொண்டும் வருகிறது. இதற்கும் குடைச்சல் தரும் வகையில், சபஹர்  துறைமுகத்தை நிர்வகிக்க இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், இந்திய நிறுவனங்கள் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளன.

இதுவரைக் கொடுத்த தொல்லைகள் எல்லாம் போதாது என்று, தற்போது எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பணியாற்ற செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி இந்தியா விவகாரத்தில் ட்ரம்ப் பேசுவது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. ட்ரம்பிடம் இப்போது பேட்டி எடுத்தால்கூட, இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதாகதான் அவர்  கூறுவார். ஆனால், அந்தப் பேட்டி ஒளிபரப்பாவதற்குள் இந்தியாவுக்கு எதிரான ஏதாவது ஒரு வேலையை அவர்  பார்த்துவிடுவார். அதுதான் அமெரிக்காவின் ட்ரம்ப் மாடல் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

Tags: Saying one thingdoing another: "Is Trump a good cop? - Is he a bad cop?"PM ModiIndiaDonald Trumpஇந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

Next Post

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies