முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!
Jul 29, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

H1B விசாவின் ஆண்டுக் கட்டணத்தை 88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால், அதிபர் ட்ரம்ப் அமெரிக்கப் பொருளாதாரத்தையே அழித்துவிட்டார் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். H1B விசா கட்டணம் உயர்வு இந்தியாவுக்குப் பாதிப்பா? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்கக் கனவுகளுடன் இருக்கும் வெளிநாட்டு இளைஞர்களுக்கு H1B விசா ஒரு வரப் பிரசாதமாகும். இது ஒரு அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணிபுரிய அனுமதி வழங்கும் நடைமுறையாகும். அமெரிக்கத் தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளைச் செய்யக் கூடிய வெளிநாட்டவர்களைப் பணியமர்த்த மட்டுமே இந்த விசா கொண்டு வரப்பட்டது.

1990-ல் இளங்கலைப் பட்டத் தகுதி அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி உடைய பணிகளுக்கான ஊழியர்கள் கிடைப்பது அமெரிக்காவில் சிரமமாக இருந்தது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்காக H1B விசா உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் H1B விசா அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படும். கிரீன் கார்டு பெற்றவர்களுக்கு மட்டும் H1B விசா காலவரையின்றிப் புதுப்பிக்க கொள்ள அனுமதிக்கப் படுகிறது.

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் தளங்களில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே H1B விசா வழங்கப்படுகிறது. 2004-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் 85,000க்கும் மேல் H1B விசா வழங்கப் பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் ஒன்றரை லட்சமாகும். இந்தக் கட்டணத்தைத் தான் அதிபர் ட்ரம்ப் 88 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

அமெரிக்காவில் வழங்கப்பட்ட மொத்த H1B விசாக்களில் சுமார் 73 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, சீனா 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த 6 மாதங்களில், அமேசான் 12,000-க்கும் மேற்பட்ட H-1B விசாக்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 5,000-க்கும் மேற்பட்ட H-1B விசா அனுமதிகளைப் பெற்றுள்ளன. இதற்கு அடுத்த நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அதிகளவில் H-1B விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக,கடந்த நான்கு ஆண்டுகளில், H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது. அதிபர் ட்ரம்பின், H-1B விசா கட்டண உயர்வால், இவ்வளவு பெரிய தொகையை ஆண்டுதோறும் செலுத்தி, வெளிநாட்டவர்களைப் பணியில் அமர்த்துவதை அமெரிக்க நிறுவனங்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் தாம் அதிகம் பாதிப்படைவார்கள் என்று கூறப்படுகிறது.

இது தவிர, வரும் அக்டோபர் மாதம் முதல் குடியுரிமை விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் கடினமான தேர்வையும் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி,அமெரிக்க வரலாறு மற்றும் அரசியலை உள்ளடக்கிய 128 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், வாய் மொழித் தேர்வில் 20-ல் குறைந்தது 12 சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, புதிய Gold card திட்டத்துக்கான உத்தரவையும் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 9 கோடி ரூபாய் செலுத்துபவர்களுக்கு விரைவாக விசா பெற முடியும். Gold card மூலம், மிகத் திறமையான நபர்களை மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அரசு அனுமதிக்கும் என்றும் இதனால், அமெரிக்க வணிகத்துறை மேம்படும் என்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களை இரவு விருந்துக்கு அழைத்த அதிபர் ட்ரம்ப், அவர்களுக்குக் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளார். H-1B சகாப்தம் அமெரிக்காவில் முடிந்துவிட்டது.இது கட்டணம் அல்ல இரும்பு சுவர் என்று அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags: H1B விசாIs the H-1B era over?: American companies in trouble due to Trump's new orderமுடிந்ததா H-1B சகாப்தம்?50% tariffIndiaamericausaDonald Trump
ShareTweetSendShare
Previous Post

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

Next Post

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies