டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றதை வரவேற்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிக்கா அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், மும்பை விமானத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் ரசிகர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் 2வது முறையாக டி-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நள்ளிரவு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொண்டாடத்தில் மத்தியப்பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கலந்து கொண்டு தேசியக்கொடியை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி இந்திய அணிக்கு வாழ்த்து வகையில் கோஷம் எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பீகார் மாநிலம், பாட்னாவில் நள்ளிரவு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியை ஏந்தியப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பொதுமக்கள் ஒன்றுக்கூடிய டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்தியா வென்றதை கொண்டாடினர். உலகக்கோப்பையின் மாதிரி வடிவத்தை கையில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டி20 உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றதை அடுத்து ராஜஸ்தானின் உதய்பூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதர டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்