தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆ.மருதப்புரத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலத்தில் மகேஷ் என்ற நபர் வேலைப்பார்த்து வந்தார்.
விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்த நிலையில் அதை பழுது பார்ப்பதற்காக மகேஷ் கிணற்றுக்குள் இறங்கி பின்பு மேலே ஏற முடியாமல் தவித்துள்ளார்.
இதுகுறித்து பாண்டியராஜ் தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மகேஷை பத்திரமாக மீட்டனர்.