திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15 ஆண்டிற்கு பிறகு லட்சார்ச்சனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அனைவருக்கும் சகல சௌபாக்கியம் கிடைக்க வேண்டி 15 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
கோயில் கொடிமரம் அருகே உற்சவ அம்மன் தங்க கவசம் ஆடை அணிந்து தங்க கமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.