செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி மீனவ பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெம்மேலி மீனவ பகுதியில் உள்ள விடுதி அருகே கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் கட்டடம் பாதிக்கப்படும் எனக் கருதி விடுதி நிர்வாகத்தினர், கடற்கரையில், பாறைக்கற்களை கொட்டி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தனர். மேலும் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.