புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்தில் பிரான்ஸ் நாடாளுமன்ற
தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 577 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவிலுள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலுக்காக பிரெஞ்சு தூதரகத்தின் சார்பில் புதுச்சேரி, சென்னை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.