பாராளுமன்றத்தில் இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு தமிழகத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது வேதனையாக உள்ளது எனத் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்திரராஜன்,
இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொண்டார். பாராளுமன்றத்துக்கு என்ற ஒரு விதிமுறை, நடைமுறையை, தாண்டி படத்தை காட்டிக் கொண்டு இருக்கிறார்.
நாட்டிற்காக உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற தவறான தகவலை ராகுல் காந்தி கூறியுள்ளதற்கு அதற்கு மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் பதில் அளித்தார்.
விவசாயிகளுக்கு பயிர்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் வழங்கப்படவில்லை என்ற தவறான தகவலையும் அவர் கொடுத்தார் அதற்கும் அமைச்சர் பதில் அளித்துள்ளார். அமைச்சர்கள் பதில் அளித்தது தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி தனக்கு விளம்பரம் தேடி கொள்ள வேண்டும் என்பதற்காக எதிர்மறை முதிர்ச்சியின்மையோடு பேசி உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிகள் ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஒரு எதிர்ப்பு கொடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிகளால் தமிழகத்திற்கு எந்த பலன் கிடைக்காது என்று கூறியவர், வேதனையான நிலையில் பாராளுமன்றத்தில் காத்திருக்கிறோம். இதனை எதிர்கொள்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி பாரதப் பிரதமர் தயாராக இருப்பார் என்றார்
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கனிமொழி மதுவிலக்கு எதிராக கருத்துக்களை கூறினார். தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்க கூட பயப்படுகிறார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த ஊருக்கு சென்று பார்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் தயங்குகிறார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்கு ஏற்ப சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.