வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2 ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். ஆட்டோ ஓட்டுநரான இவர் குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதி ஆறு பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் தலைமறைவான நிலையில் போலீசார் அவதை தேடி வருகின்றனர்.