விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் Cஅன்புமணியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பாமக தலைவர் அன்புமணி செய்த அரும்பணிகள் சிறப்பானவை. புகை பிடிப்பதற்கு எதிரான சட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் முதலானவற்றைக் கொண்டு வந்த சமூக நோக்கம் மிக்க தலைவர். அவரது நோக்கமான, போதைப் பொருள் இல்லாத தமிழகம் அமைய, நமக்குக் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் என தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல், தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, எச்சரிக்கை மணி அடிக்கவிருக்கும் தேர்தல். போதையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்க, நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான வாய்ப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தல். எனவே, விக்கிரவாண்டி பொதுமக்கள், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.