இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தை ஜூலை 12ஆம் தேதி வெளியிடத் தடை விதிக்கக்கோரி, மதுரையை சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்தியன் திரைப்படத்தில் பயன்படுத்திய வர்மகலை முத்திரையை அதன் 2 ஆம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் இந்தியன் 2 படத்தில் வர்மகலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் சங்கர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி, படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.