ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டாரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் கடந்த 13-ஆம் தேதி முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது எல்லையில் உள்ள வேலியைத் தாண்ட முயன்ற மூன்று தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அந்தத் தீவிரவாதிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்களிடம் இருந்த அதிநவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















