கேரளா மாநிலம் மூணாறு மற்றும் மறையூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது.
90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று 64 அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக
உயர்ந்ததால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 72 அடியை எட்டியுள்ளது.
ஓரிரு நாட்களில் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.