தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
நடப்பு கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு இன்றும், பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25-ம் தேதியும் கலந்தாய்வு தொடங்குகிறது. அதேபோல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.