நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்களின் ஜாமின் மனு மீதான விசாரணை தொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியது மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்டவை தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.