ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக, வழக்கறிஞர் ஆனந்த்தை நியமனம் செய்து அக்கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் அக்கட்சித் தலைமை நியமித்துள்ளது.
விரைவில் தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.