முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 48-வது முறையாக அண்மையில் நீட்டிக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக செந்தில் பாலாஜி கடந்த ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.