கலிபோர்னியாவில் அதிகரித்து வெப்பம் காரணமாக, காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
ஹவார்டன் தீவில் 400க்கும் அதிகமாக ஏக்கர் வனப்பகுதில் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் தீ பரவியுள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.