தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலையோரம் மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருபுவனம் பகுதியில் சாலையோரத்தில், சிலர் மருத்துவக் கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.