சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத்தில் இல்லம் தோறும் மூவர்ணக்கொடி பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு முழுவதும் வரும் 15ம் தேதியன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சூரத்தில் நடைபெற்ற இல்லம் தோறும் மூவர்ணக்கொடி பிரசார நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பங்கேற்றனர்.