கிரீஸ் தலைநகர் ஏதென்சில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஏதென்சில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில்,அங்கு உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதனால் கடும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.