உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்தது.
இரு நாடுகளும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.