65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! - அண்ணாமலை
Jul 10, 2025, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 16, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு வழியாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் 17 அன்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காலதாமதமாக்கிக் கொண்டிருந்த திமுக அரசு, ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை அடுத்துப் பணிந்திருக்கிறது. பொதுமக்களின் 70 ஆண்டு காலக் கனவு, தமிழக பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் நிறைவேறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது என்பதையும், இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல், பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது. திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும்.

எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.

தமிழகத்தில், பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை.

இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் திரு. ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

தற்போது, ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது. எனினும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: annamalai ipsVictory for farmers who fought for 65 years for Athikadavu Avinasi project! - Annamalaiannamalai newsannamalai livek Annamalai Bjpbjp k annamalaiannamalai pressmeetbjp annamalaiAnnamalai Press Meetannamalai aniannamalaik annamalai interviewannamalai annak annamalaik annamalai news todayannamalai bjpk annamalai latest interviewannamalai speechk annamalai ipsannamalai latest speechannamalai latest newsk annamalai speechk annamalai latestk annamalai india todayannamalai latest
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Next Post

விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் விவசாயி தற்கொலை!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies