இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 2 பில்லியன் டாலராக இருந்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, இந்த ஆண்டில் 2.8 பில்லியனாக அதிகரித்துள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், இறைச்சி, பால் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.