காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
காலண்டர் தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆய்வாளரான கஸ்தூரி 30 வருடங்களுக்கு முன்பே கணவரை விவாகரத்து செய்தார். இவரது மகன் டேராடூனில் வேலைபார்த்து வரும் நிலையில், கஸ்தூரி தனிமையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த நிலையில், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கஸ்தூரி சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கஸ்தூரியின் மரணம் தொடர்பாக அவரது நீண்டகால நண்பரான மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.