மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகை நமீதா சாமி தரிசனம் செய்தபோது எழுந்த சர்ச்சை தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், தம்மை இந்துவா எனக்கேட்டு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக நடிகை நமிதா சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நமீதா புகார் குறித்த விசாரணை அறிக்கை அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், “நமீதா, அவரது கணவர் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய வழியில் அனுமதிக்கப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நமீதாவிடம் சாதி, மதம் தொடர்பாக கேள்வி ஏதும் கேட்கவில்லை எனவும், விதிமுறைகள்படியே நடந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.