அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI AND AMERICA : PROGRESS TOGETHER என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் அமெரிக்காவின் 42 மாகாணங்களில் வசிக்கும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் வர்த்தகம், அறிவியல், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.