விநாயகர் சதுத்தி விழா தடைகளை மீறி சிறப்பாக நடைபெறும் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ள நிலையில், தடைகளை மீறி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.