பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனீஷ் நர்வாலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 10 மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் மனீஷ் நர்வால் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த சாதனை மிக்க வெற்றியானது, நமது இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.