காலனியாதிக்கத்தின்போது நாட்டின் வளங்கள் ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். கல்விக் குழுமத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவில் பங்கேற்ற அவர், நாடு 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த சமயத்தில் கடினமான சூழலை எதிர்கொண்டதாக கூறினார்.
ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை மறைக்க முயன்றதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதை எதிர்த்து வள்ளலார், வைகுண்டர் போன்றோர் சமூக புரட்சிக்கு வித்திட்டதை மேற்கோள்காட்டினார்.