விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல்வேறு நகரங்களில் கண்ணைக் கவரும் வகையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கொல்கத்தாவில் உள்ள பேக்கரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 500 கிலோ எடை கொண்ட பிரமாண்ட லட்டு தயாரிக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முந்திரி, பேரீச்சை பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரமாண்ட லட்டை பலரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
மும்பையில் பக்தர் ஒருவர் தனது வீட்டில் தேஜஸ் போர் விமானத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்திருப்பதைப் போல சிலையை வடிவமைத்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், விநாயகர் சிலையை தாம் வடிவமைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்ததை கருப்பொருளாக கொண்டு நிதின் கட்கரி வீட்டில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மும்பையில் நடிகர் சோனு சூட் தனது வீட்டில் விநாயகர் சிலைக்கு தீபாராதனை காட்டி, குடும்பத்தினருடன் வழிபட்டார்.